மாறி வரும் எமது சமூகம்

இலங்கையில் போதைப்பொருள் பாவனையைக் குறைப்பதில் அனைத்துத் தரப்பினரும் அக்கறை காட்டி பல்வேறு பயன்தகு செயற்பாடுகளை மேற்கொள்கிறார்கள். அதனால் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நடத்தை ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், சமூக நலன்விரும்பிகள் போன்றோர் சமூகத்தை விழிப்புணர்வூட்டுவதனால் கிடைத்த வெற்றியேயாகும். மறுமுறையில் நாளொன்றிக்கு பல இலட்சக்கணக்கில் அப்பாவி மக்களின் பணத்தை சூறையாடும் சிகரெட் மற்றும் மதுசாரக் கம்பனிகள் துரித கதியில் தங்களுடைய விளம்பரத் தந்திரோபாயங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். இருப்பினும் சமூகம் சாதாரன நிலைக்கு மாறி வருவதனை அவர்களினால் தடுத்து நிறுத்த முடியவில்லை. குறிப்பிட்ட போதைப்பொருட்களை தடுக்கும் போதைப்பொருள் தடுப்பு நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளும் எங்கள் குழந்தைகள் மீது அன்பு வைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் போதைப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேருவது எமது சமூகத்திற்கு மகிழ்ச்சி தரக்கூடிய விடயமேயாகும்.
சமூகத்தின் சாதகமான மாற்றங்களை விரிவாக நோக்குவோமேயாயின் ஆரம்ப காலத்தில் உழைக்கும் பணத்தில் பெரும்பகுதியை மதுசாரப் பாவனைக்கும் சிகரெட் பாவனைக்கும் செலவு செய்து வந்தனர். ஆனால் தற்போது மேற்குறிப்பிட்ட போதைப்பொருள் பாவனைகளுக்கு செலவு செய்வது முட்டாள் தனமான விடயம் என்பதனை உணர்ந்து மாதமொன்றிற்க்கு செலவு செய்யும் பணத்தொகையை கணக்கிட்டு குறைத்து வருகின்றனர். மேலும் வீணாக செலவு செய்த பணத்தொகையை சேமித்து தங்களின் குடும்ப செலவிற்க்கு பயன்படுத்தி வருகின்றார்கள்.
பல வருடங்களிற்கு முன்னர், சிகரெட் புகைப்பதன் மூலம் பதட்டம் குறையும் நவீன நாகரிகப் பண்புகள் உருவாகும் என எண்ணியவர்கள், தற்போது சிகரெட் புகைப்பதனால் அவலட்சணமான தோற்றம், வாய் துர்நாற்றம், பாலியல் பலவீனம், வாழ்க்கை மட்டுப்படுத்தப்படல் போன்ற அசௌகரியமான
நிலைக்குத் தள்ளப்படுகின்றோம் என்பதனை உணர்ந்து புகைப்பதைக் குறைநத்து வருகின்றனர். மதுசாரம் அருந்துபவர்கள் கூறும் முட்டாள் தனமான கருத்துக்களான் மது அருந்தினால் கவலை குறையும் மகிழ்ச்சி ஏற்படும் உடற்களைப்பு நீங்கும் என்பவை போலியான கூற்றுக்கள் என்பதை அறிந்திருக்கிறார்கள். அதாவது மதுசாரம் அருந்தினால் மேற்குறிப்பிட்ட இந்த விடயமும் ஏற்படாது. இருந்த போதும் நிறுவனங்கள் எங்களை ஏமாற்றுவதற்க்காகவே மேற்குறிப்பிட்டவாறு பல பொய்களை கூறுகின்றனர் என்றும் மதுசாரம் அருந்தினால் அசௌகரியமாக இருப்பதுடன் தலைச்சுற்று, ஓங்கானம், வாந்தி, வயிறு பிரட்டல் போன்ற பல இன்னல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டும் என்றும் அறிந்து மதுசாரத்தில் உள்ள உண்மைத் தன்மையை ஏனையோர்க்கும் தெரியப்படுத்தி வருகின்றனர்.
மது அருந்தியவர்கள் பல்வேறு சலுகைகளைப் பெற்று சமூகத்தில் உள்ள ஏனையோர்களுக்கும் பல துன்பங்களை கொடுத்திருந்தாலும் தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறி வருகின்றது. அதாவது மதுசாரம் அருந்தியவர்களுக்கு சுயநினைவு இல்லாமல் போவதில்லை. செய்யும் அனைத்துச் செயற்பாடுகளையும் சுயநினைவுடனேயே செய்கின்றனர். சமூகத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்க்காகவே சுயநினைவு இல்லாதது போன்று நடிக்கிறார்கள். தற்போது இதனை உணர்ந்த சமூகம்; மது அருந்தியவர்கள் துன்புறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடும் போது தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக பெண்கள், தமது கணவன் குடித்துவிட்டு செய்யும் சேட்டைகளுக்கு தகுந்த முறையில் பிரதிபலிப்புகள் வழங்குவதன் மூலம் வீட்டு வன்முறைகள் குறைந்து வருகிறது.
முன்னைய காலங்களில் தொலைக்காட்சிகளில், பத்திரகைகளில் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பாக அந்நிறுவனங்கள் தங்களுடைய விளம்பரங்களை எந்தவித எதிர்ப்புகளும் இல்லாமல் விளம்பரப்படுத்தினர். ஆனால், தற்போது ஊடகவியலாளர்கள்; ‘நாம் அறியாமையில் ஒரு காலத்தில் இவற்றை விளம்பரப்படுத்தினாலும் இனி எமது குழந்தைகளை ஏமாற்றுவதற்க்கு உடந்தையாக இருக்க மாட்டோம்’ என்று முனைப்புடன் செயற்பட ஆரம்பித்துள்ளனர். மேலும், போதைப்பொருள் நிறுவனங்களுக்கு சாதகமான வகையிலோ அல்லது போதைப்பொருட்களான சிகரெட், மதுசாரம் போன்றவற்றின் பாவனைகளை தூண்டக்கூடிய வகையிலோ ஊடகங்களில் காட்சிப்படுத்துவது அல்லது எழுதுவது மிகவும் வருந்தத்தக்க செயல் என்பதை அறிந்து; அவ்வாறான விடயங்கள் சக ஊடகவியலாளர்களினால் இடம்பெறும் போது இது பற்றி விளக்கிட அதனைத் தடுக்க முயற்ச்சிக்கின்றனர்.
சமூக மட்டத்தில் ஊடகங்களில் சிகரெட், மதுசாரம் உட்பட ஏனைய போதைப்பொருட்கள் விளம்பரமாகும் போது அதனைக் கண்டு கொள்ளாமால் இருந்தவர்கள், தற்போது ஊடகங்களுக்கு தங்களின் எதிர்ப்பினைத் தெரிவித்து அதனைத் தடுக்க முயற்ச்சிக்கின்றனர். மேலும் ஊடகங்களின் மூலம் போதைப்பொருள் பாவனை ஊக்கப்படுத்தும் சந்தர்ப்பங்களில் பெற்றோர்களின் மூலம் தமது பிள்ளைகளை விழிப்புணர்வூட்டி வருகின்றனர்.
ஒரு காலத்தில் சிகரெட் புகைப்பதனால் அரசாங்கம் இலாபம் ஈட்டுகின்றது என்ற கருத்தைக் கொண்டிருந்தாலும் தற்போது சிகரெட் புகைப்பதனால் 90 சதவீதமான இலாபம் ஐரோப்பிய நிறுவனங்களே ஈட்டிக்கொள்கின்றனர் என்பதை அறிந்துள்ளனர். இது தவிர கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை அபிவிருத்தி அடைந்த நாடுகள் சுரண்டி எடுக்கும் ஒரு தந்திரோபாயமாகவே போதைப்பொருள் வியாபாரங்ளை பயன்படுத்தி வருகிறது. அது மட்டும் அல்லாது அரசாங்கம் ஈட்டும் இலாபங்களைக் காட்டிலும் புகைப்பதனால், மதுசார பாவனையினால் பாதிக்கப்படும் நோயாளர்களுக்கு அதிகமான தொகையை செலவிட வேண்டியுள்ளது என்ற உண்மையை அறிந்து வருகின்றார்கள்.

Word count: 434   Last edited by nidarshana on June 24, 2016 at 9:50 am

Publish

Published EditEdit status
Visibility: Public EditEdit visibility
Published on: Jun 24, 2016 @ 09:40EditEdit date and time

Categories

Tags

Separate tags with commas

Choose from the most used tags

Post Views Count

(Clic value to edit it)

  • all: 0 views
  • day: 0 views
  • week: 0 views
  • month: 0 views
  • year: 0 views

Featured Image

Media-Logo

Click the image to edit or update

Remove featured image46 Viewers