இம்முறையாவது மேதினக் கொண்டாட்டங்களை அர்த்த முள்ளதாக்குவார்களா எமது அரசியல்தலைவர்கள்?

 

மே தினக் கொண்டாட்டம் தொழிலாளர்களின் உரிமையாகும். தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்வைப்பதற்கும் , அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும் மே தினத்தின் போது ஆர்ப்பாட்டங்களும் , நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம். இதில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய உறுப்பினர்களுடன் மே தின நிகழ்வுகளை கொண்டாடி வருவதனால் அரசியல்வாதிகளுக்கும் தங்களது அரசியல் விளம்பரங்களை மேற்கொள்வதற்கு மே தினம் சிறந்த ஒரு களமாக பயன் படுத்தப் படுகிறது.

ஆனால் கடந்த காலங்களில் மே தினக் கொண்டாட்டங்கள் மிகவும் இருண்ட சுபாவத்தையே மலையகத்தில் தோற்றுவித்தன. அதாவது மே மாதம் 1ம் திகதி நெருங்கிவிட்டாலே கட்சிக் காரர்களை ஒன்று கூட்டுவதிலிருந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் திட்டமிடுவார்கள். அதில் சில அதிகாரிகள் அரசியல் தலைவர்களுக்கு முட்டாள்த்தனமான ஆலோசனைகளையும் வழங்குவதுண்டு, அதாவது ‘நம்ம ஆக்களை சேர்க்கோணும் என்றால் சாராயம் வாங்கிக் கொடுக்க வேண்டும்’ என்று முட்டாள்த்தனமான ஆலோசனைகளை அரசியல் தலைவர்களுக்கு முன்வைப்பார்கள். அரசியல் தலைவர்களும் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் அனுமதிப்பார்கள். இதனால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நான் சொல்லித் தெரியத் தேவையில்லை. வன்முறைச் சம்பவங்கள் இடம் பெறுவதிலிருந்து, குடும்பத்திலுள்ளோரின் மகிழ்ச்சி குழிதோண்டி புதைக்கப் படுகின்றது. மேலும் சிறுவர்கள் சாராயப் பாவனைக்கு பழகும் சந்தர்ப்பங்களும் அதிகமாகுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இன்னும் எத்தனை எத்தனையோ….!

ஆனால் எமது அரசியல் தலைவர்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். அதாவது தற்போதைய சமூகம் முட்டாள்த்தனமான செயல்களை புறக்கணிப்பதற்கு தயங்கமாட்டார்கள். சாராயம் கொடுப்பதனால் கட்சிக்கும், அரசியல் தலைவரான உங்களுக்கும் இருக்கின்ற நன்மதிப்பு இல்லாமல் போகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு சிறந்த உதாரணம் எமது நாட்டு ஜனாதிபதி அவர்கள், அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சாராயம், சிகரட், ஹெரோயின் போன்ற போதைப் பொருள் தடுப்புப் பிரதான இடத்தில் இருந்தன. அவரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லையா?

இதிலிருந்து எமக்கு புரிவது சமூகம் சாராயத்தினால் அல்லது ஏனைய போதைப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புக்களை நன்கு அறிந்திருக்கின்றார்கள். ஆனால் போதைப் பொருள் வகைகளை உற்பத்தி செய்யும் சில கம்பனிகளின் தந்திரோபாயங்களின் காரணமாக ஒரு சிலர் ஏமாற்றப் படுகின்றார்கள். அரசியல் தலைவர்களாகிய நீங்கள் கட்சியையும், கட்சியின் நன்மதிப்பையும் சீர்குழைக்கும் விதத்தில் இம்முறை மே தினக் கொண்டாட்டத்தில் நடந்துக் கொள்ள வேண்டாம், அதாவது மே தினக் கொண்டாட்டத்தில் கட்சிக் காரரை ஒன்று சேர்ப்பதற்கு சாராயம் கொடுக்க வேண்டுமென்று முட்டாள்த்தனமான ஆலோசனை தருபவரிடம் கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். அவரின் ஆலோசனையை நிராகரியுங்கள். மேலும் மே தினக் கொண்டாட்டத்தின் போது தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கும், அவரகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் நடவடிக்கை எடுங்கள்.

அதே போன்று கட்சித் தொண்டர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் சந்தோஷமாக வாழும் உரிமையையும் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அதாவது,

மே மாதம் 01ம் திகதியில், அனைத்துத் தரப்பினரும் தொழிலாளர்களாகிய எமது உரிமைகள் தொடர்பாகக் கதைப்பது வழக்கம். ஆனால் கதையில் மட்டும் இருந்து விடாமல் உண்மையாக உரிமைகளை வென்றெடுப்பதற்கு முயற்சி எடுப்போமாயின் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

தற்போது தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் பிரதான காரணமாக அமைவது பணப்பற்றாக்குறையே ஆகும்.

அதன் காரணமாகவே, அனைத்துத் தரப்பினரும் தொடர்த்தேர்ச்சியாகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக அதிக கரிசனை காட்டிவருகிறார்கள்.

எமது குடும்பத்தில் சம்பாதிக்கும் அனைவரும் உடலை வருத்;திக் கஷ்டப்பட்டு உழைக்கின்றனர்;. ஆனால் சாராயக் கம்பனிகள் எங்களை ஏமாற்றிஇ எமது சம்பளத்தில் பெரும் பகுதியை சூறையாடுகின்றார்கள். (ஒரு தோட்டத்தில் மட்டும் மாதாந்தம் 1இ300இ000 சாராயக் கம்பனிகள் சூறையாடுகின்றார்கள்)

‘நாம் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் சந்தோஷமாக வாழ்வதற்கு உரிமையுண்டு. ஆனால் சாராயக் கம்பனிகள் எமது உரிமையைப் பறித்தெடுக்கின்றார்கள்’.

ஆகவே,

இவர்களிடமிருந்து எமது உரிமையை வென்றெடுப்பதற்கு அனைவரும் ஒன்று கூடுவோம்! செயற்படுவோம்!

 

 

 

 

 7 Viewers