சித்திரை புத்தாண்டை கொண்டாடத் தயாரா?

நாம் அனைவரும் சித்திரைப் புத்தாண்டு நெருங்கி விட்டாலே மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். காரணம் பல வித கொண்டாட்டங்கள் எம்மனதில் தோன்றி எம்மை குஷிப்படுத்துகின்றது. புதுப் பட்டாடை அணிதல் தொடக்கம், பலகாரம், கைவிஷேடம், புது வருட விளையாட்டுக்கள் வரை எம்மை மகிழ்ச்சிப் படுத்துபவையாக அமைகின்றன. ஆனால் சில விடயங்கள் நினைப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அனுபவிக்கும் போது அல்லது அனுபவித்த பின்னர் மிகவும் கசப்பான, அசௌகரியமான அனுபவமாக மாறிவிடுகின்றன.
உதாரணமாக புத்தாண்டின் போது சிலர் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நோக்குடன் முட்டாள்;தனமாக சாராயம், பியர் போன்ற மதுசார வகைகளை அருந்துவதுண்டு. அருந்துபவர்களை நன்கு உற்று நோக்கிப் பார்த்தால் அவர்களுடைய முகங்களில் அந்த அசளகரியமும், களைப்பும் விளங்கும் ஆனால் பலர் அதனை மறைத்து சந்தோஷமாக இருப்பதைப் போன்று காட்டிக் கொள்ள விரும்புகின்றார்கள். இருந்த போதும் அவர்களுக்கு மகிழ்ச்சியான விடயங்களில் ஈடுபடுவதற்கு மதுபானம் தடையாக அமைந்து விடுகின்றது.
அண்மையில் நான் ஒரு மதுபானம் அருந்திய ஒருவரை அவதானித்தேன். அருந்துவதற்கு முன் கலகலப்பாக ஏனையோருடன் இருந்தார். ஆனால் அருந்திய பின் அவரினால் ஆடுவதற்கோ, மற்றவர்களுடன் இன்முகத்துடன் கதைப்பதற்கோ, சிரிப்பதற்கோ முடியவில்லை. ஆனால் மிகவும் முயற்சி செய்து மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளில் ஈடுபட முனைந்தார். மகிழ்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்துடன் முட்டாள்;தனமாக மதுபானம் அருந்தியவர்களை கவனித்தால் சிறிது நேரத்தின் பின்னர் துணைக்கு ஒருவர் தேவைப்படும் அளவிற்கு உடல் அலுப்பை அதிகரித்துக் கொள்வார். கசப்பான,நாற்றமான, தொண்டை எரிவை ஏற்படுத்தக்கூடிய, வயிறு குமட்டக் கூடிய அனுபவத்திற்கு முகம் கொடுக்க நேரிடும். அருந்திய பின்னர் தலை சுற்றுடன் எச்சில் துப்பிக் கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறான நிலைமையின் போது அதிகமானோர் தூங்குவதற்கே விரும்புவார்கள்.
ஆனாலும் சிலர் மேற்குறிப்பிட்ட அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டு மது அல்லது பியர் அருந்தினாலும், பின்னர் வெளியில் சொல்ல முடியாத அளவு அசளகரியத்தை அனுபவிக்கின்றனர். புத்தாண்டில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய தருணத்தை அசௌகரியமாக கழிக்கும் போது எங்களை சூழவுள்ளவர்களும் அசௌகரியத்தை அனுபவிக்க நேரிடும்.
எனவே மகிழ்ச்சி பொங்கும் சித்திரைப் புத்தாண்டில் நாம் ஏமாந்து சாராயம் அல்லது பியர் குடித்து அசௌகரியப்படுவது மட்டுமில்லாமல் எம்மை சுற்றி இருப்பவர்களின் சந்தோஷத்தையும் மட்டுப்படுத்தும் அளவு அறிவுக்குன்றியவர்களாக செயற்படாடலிருப்பதற்கு இது நல்ல தருணமாகும்.2 Viewers