திருவிழாவை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவோமா?

மலையகத்தில் தற்போது திருவிழா காலம். முலையக மக்கள் தேர் திருவிழாவை தோட்டங்ள் தோரும் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்துக்கள் பெருபான்மையாக கொண்ட மலையகத்தில் திருவிழா முக்கிய இடத்தை வகிக்கின்றது.தோட்டங்கனில் திருவிழா தொடங்கி விட்டால் அங்குள்ள மக்களின் வாழ்க்ழையில் உயிர்;துடிப்பு ஏற்படுகின்றது. துpனமும் உண்பதும் உழைப்பதும் என்ற வாழ்க்கைக்கு அப்பால் மக்களிரடயே உற்சதகத்தையும் மனப்éரிப்பையும் ஏற்படுத்துகின்றது.
மேலும் கோயிலையும் தமது வீடுகளையும் சுத்தம் செய்து வாழைமரம் நாட்டி சூழலை ஏற்படுத்துவர். திருவிழா நிகழ்வுகள் காப்பு கட்டீ கரகம் பாலித்துக பால்குடம் எடுத்து வேல் éட்டி காவடி கரகம் கோலாட்டம் கும்மி அடித்து குலவு பாட்டு பாடி தேர் இழுத்து மாவிலக்கு éஜை செய்து மகிழ்வை ஏற்படுத்தும்.
ஆரம்பகாலங்களில் பெரும்பாலான தோட்டஙகளிலே திருவிழா நிகழ்வுகளின் அறிவுக்கு விருந்தான நாடகங்கள் சிலம்பாட்டங்கள் போன்ற வீர விளையாட்டுக்கள் எமது மக்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் தப்பு மேளம் உருமி உடுக்கு போன்ற பாரம்பரிய இசைகளும் இசைக்கப்பட்டு வந்தது. எமது கலாச்சாரம் பேணி பாதுகாக்கப்பட்டது.மக்களை ஒன்று சேர்க்கவும் ஐம்புலங்களுக்கும் விருந்தளித்து மக்கள் மனதில் நற்பண்புகளை வளர்த்து சொந்த கவளைகளையும் மறந்து அமைதிமிக்கதோர் தத்துவம் கொண்டது தேர்திருவிழா.
அப்படிபட்ட தத்துவம் நிறைந்த திருவிழாக்கள் மலையகத்திலே குறிப்பாக தோட்ட பகுதியில் அதே பாரமபரியத்துடன் புனிதமாகக் கொண்டாடப்படுகின்றதா என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
பெரும்பாலான தோட்டங்களிலே எமது பாரம்பரியம் அழிக்கப்பட்டு புனித தன்மை சிதைக்கப்பட்டு நாகரீக மோகத்தாலும் பல்தேசியக் கம்பனிகளின் சூழ்ச்சிகளுக்கு அகப்பட்டு சின்னாப் பின்னமாகி ஏனைய மதத்தவர்களே எம்மை கேலி செய்யும் அளவிற்கு ஆளாகியுள்ளோம்.இந்நிலமைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக திருவிழாவின் புனித தன்மை சிடைவடைய காரணமாக இருப்பது சாராயம் மற்றும் பியர் குடித்துவிட்டு திருவிழா நிகழ்வுகளில் பங்கு பற்றுவதேயாகும்.
இந்நிலைமைக்கு பல்வேறு காரணங்களகாணப்படுகின்றன. குறிப்பாக தோட்டங்களில் மக்களிடையே காணப்படுகின்ற சிற் சில முரண்பாடுகள் முதியவர்களை மதிக்காமை அனைத்து தரப்பிடமும் கருத்து கேட்காமை கல்வி கற்று அரச தனியார் துறைகளில் பணிப்புரிகின்றவர்கள் தோட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஒதுக்கி வைப்பதும் அவர்கள் ஒதுங்கி நிற்பதும் பெண்களிடம் கருத்து கேட்காமை மற்றும் அவர்களை உள்வாங்காமை என பல காரணங்களை ஏடுத்துக் கொண்டே போகலாம்.
சிலர் திருவிழா நிகழ்வுகளில் போது சாராயம் குடித்துவிட்டு வாய் நாத்ததுடன் ஆலயத்திற்கு வருவதும் ஆலயத்திலும் புனிதப்பட்டிருக்கும் விக்ரங்களை தொடுவதும் தேர் இழுக்கப்படும் அல்லது சப்பாரம் Àக்கும் போது முன் பின் வருவதும் குடித்து விட்டு தாங்கள் கஷ;டப்படுவது மட்டுமன்றி மற்றவர்களை கஷ;டப்படுத்தும் எமது மதத்தை மடடுமல்ல எமது கடவுளையும் அவமதிப்பதாகும்.
மேலும் சாரயம் குடித்துவிட்டு தனது போலியான நடிப்பால ஏற்படும் சண்டை சச்சரவுகளால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் திருவிழாவை பார்த்து ரசிப்பதை விட அச்சப்படுகின்றவர்களால் உள்ளனர். அதேநேரம் திருவிழா நிகழ்வகளில் பங்கு கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து சந்தோஷம் இல்லாமல் போவதையும் காணலாம். மேலும் திருவிழாவை சிறப்பிக்க கொழும்பு போன்ற இடங்களிலிருந்து வரும் இளஞர்களின் மேதாவி தனத்தால் எமது கலாச்சாரமே (கேள்விக்குறியாவதை) சீரழிக்கப்படுவதை அவதானிக்கலாம் மற்றும் அவர்களின் பொருத்தமில்லாத ஆடைகளை அணிவதுடன் தாம் கஷ;டப்பட்டு உழைத்து கொண்டு வரும் பெறுந்தொகைப்பணத்தை சாராயத்திற்கு கொடுத்து ஊர் திருவிழாவில் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றனர்.
மேலும் தோட்டங்களில் எமது பாரம்பரிய கலை கலாச்சாரங்கள் இல்லாமல் போவதற்கு அடிப்படை காரணமே சாராயம் குடித்துவிட்டு அந்த கலை கலாச்சார நிகழ்வுகளை பின்பற்றுவதுதான் பெரும்பாலான கலைஞர்கள் சாராயம் குடித்து விட்டு கலை கலாச்சார நிகழ்வகளில் பின்பற்றுவதால் படித்த அல்லது இளஞர்கள் மதிக்காமலும் சாராயம் குடித்து விட்டு ஆடுகிறார்கள் அல்லது இந்த கலை கலாச்சார நிகழ்வுகளில் பங்கு பற்றினால் கட்டாயம் குடிக்க வேண்டும் என்ற எண்ணமும் சிலர் மத்தியில் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது.15 Viewers