பெண்கள் நாம்……. குடிப்பவர்களின் போலி நடிப்புக்களுக்கு ஏமாந்தால் தொடர்ந்தும் துக்கப்பட வேண்டியதுதான்.

இலங்கையில் பெண்களுக்கெதிரான பிரச்சினைகள் பற்றி ஆராயும் போது அதில் முன்னனி வகிப்பது மதுசார பாவனையை காரணமாக வைத்து ஏற்படுத்தப்படும் வன்முறைச் சம்பவங்களாகும்.
அதாவது மதுசாரம் அருந்திவிட்டு பெண்களை துன்புறுத்துவது, அடிப்பது, கெட்ட வார்த்தைகளை கொண்டு தூற்றுவது, பாலியல் துஷ்பிரயோகங்கள் என பல வடிவிலும் பெண்கள் மீதான வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனை குறைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமென ஆராய்ந்த போது ‘மதுசாரம் அருந்திய பின்னரான நடத்தைகளுக்கும் மதுசாரத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை’ என்ற உண்மை ஒப்புவிக்கப்பட்டுள்ளது. அதாவது மதுசார பாவனையின் பின்னர் சுய நினைவு இல்லாமல் போவதனால் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்ற மூடநம்பிக்கையை பெண்கள கொண்டிருப்பதனால் அதனை சாதகமாகப் பயன்படுத்தி சாராயம் குடிப்பவர்கள் தங்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொள்கின்றாரகள் என்ற விடயம் ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
சாராயம் குடித்துவிட்டு நடந்து கொள்ளும் விதத்தினை நன்று அவதானியுங்கள்,
• குடித்து விட்டு சத்தம் போட்டுக்கொண்டும் வீர வார்த்தை பேசிக்கொண்டும் வரும் ஒருவர் வீட்டிற்கு வரும் ஒருவர் பொலிஸ்காரரை கண்டால் அமைதியாக மாறிவிடுகின்றார்.
• சாராயம் குடித்துவிட்டு வழமையாக தனது மனைவியை துன்புறுத்தும் ஒருவர் மனைவியின் பலம் வாய்ந்த அண்ணன் ஒருவர் வீட்டிற்கு வந்திருக்கும் சந்தர்ப்பத்தில் அமைதியாக நடந்துக் கொள்கின்றார்.
• சாராயம் குடிப்பவர்களின் வீரம் பலவீனமானவர்களிடத்pலேயே காண்பிக்கப்படுவதுடன் தன்னைவிட பலசாலி ஒருவர் வரும் போது தலையைக் குனிந்து கொண்டு நடந்து செல்வார்.
• மதுசாரம் அருந்தினாலும் தனக்கு சாதகமான விடயங்களை மாத்திரமே செய்வதுடன், தனக்கு பாதகமாக அமையும் எந்த செயற்பாட்டையும் செய்ய மாட்டார்கள். உதாரணமாக சாராயம் குடித்துவிட்டு தனக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்புகள் இருந்தால் அதை ஒரு போதும் கூறமாட்டார்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை வைத்துப் பார்க்கும் போது குடிப்பவர்களின் பச்சோந்தி செயற்பாட்டை நன்கு அறிந்துக்கொள்ளலாம்.
சற்று சிந்தியுங்கள்
கணவன் சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தால் மனைவி வீட்டிலுள்ள எந்தவிதமான பிரச்சினைகளையும் கூறுவதில்லை. அவருக்கான கவனிப்பும் அதிகரிக்கின்றது. வீட்டில் சமைப்பதற்கு பொருட்கள் இல்லாவிட்மாலும் பக்கத்து வீட்டில் இரவலாக வாங்கி சமைத்து வைக்கின்றனர். மேலும் மதுசாரம் அருந்துபவர்களுக்கு பல பொறுப்புக்களிலிருந்து விடுபடும் வாய்ப்பும் அதிகம், அதாவது பிள்ளைகளின் கற்றல் பெற்றோர்களின் பொறுப்பு மற்றும் ஏனைய குடும்ப பொறுப்புக்களையோ இவர்களுக்கு வழங்கப்படமாட்டாது, அவற்றை மனைவியே பொறுப்பேற்று செயற்படுத்த எத்தணிப்பார்.
அது மட்டுமா? குடிப்பவர்கள் பாலியல் துஷ்பரயோகங்களை மேற்கொண்டாலும் அதை அறியாமலேயே செய்திருப்பார்கள் என்று எண்ணி அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன அதாவது துஷ்பிரயோகங்களை செய்தவர்களை குற்றம் சுமத்தாமல் மதுசாரம் மீது குற்றத்தை சுமத்துகின்றனர்.
பெண்கள் நீங்கள் இவற்றிற்கு என்ன செய்யலாம்?
• சாராயம் குடிப்பவர்கள் குடித்துவிட்டு போலியாக நடிக்|கும் சந்தர்ப்பத்தில் ‘நாம் ஏமாறவில்லை’ என்பதனை தெரியப்படுத்துவோம்.
• குடித்துவிட்டு செய்யும் சேட்டைகளுக்கு இடம் கொடுக்காமலிருப்போம்.
• எமது சிறுவர்களுக்கும் குடிப்பவர்களின் போலி நடிப்புக்கள் தொடர்பாக தெரியப்படுத்துவோம்.
• சாராயம் குடித்து விட்டு வீட்டில்,பேருந்து வண்டியில், வீதிகளில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் துன்புறுத்தல்களுக்கு இடமளிக்காமல் இருப்போம். அவ்வாறு செயற்பவோருக்கு சலுகைகளை வழங்காமல், தகுந்ந பிரதிபலிப்பை வழங்குவோம்.
இனிமேலும் ஏமாறாமலிருக்க பெண்களின் சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்ள தகுந்த பிரதிபலிப்புக்களை வழங்குவோம். எவராக இருந்தாலும் அவர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த பெண்களுக்கு வலிமையுண்டு, அத்துடன் அவர்களின் துன்புறுத்தல்களிலிருந்து விடுவித்துக்கொள்ளவும் முடியும்.8 Viewers