ஊடகங்கள் வாயிலாக எத்தனை பொய் பிரச்சாரங்கள் மக்கள் மயப்படுத்தப்படுகின்றன?

நாம் இன்று யாரை நம்புவது? எமது அரசியல் உரிமையின் ஆதாரமான எமது அமைச்சர்களையா? அல்லது தினந்தோறும் எமக்கு ஊடகங்களின் வாயிலாக வரும் தகவல்களை அள்ளித்தரும் ஊடகவியலாளர்களையா? மக்கள் இருவருக்கிடையில் திண்டாடுகின்றனர். ஆனால் மதுபான கம்பனிகள் சிரிக்கின்றனர். தங்கள் கூறும் பொய்;களுக்கு தலையாட்டும் எமது அமைச்சர்களும் ஊடகங்களும் இருக்கின்றனர் என்று பெருமிதம் கொள்கின்றன.

இது எவ்வளவு ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு விடயம். ஆனால் இதனை பொறுப்பேற்று ஆய்வு செய்யும் மக்கள் நலன் விரும்பிகள் தங்களது கடமையிலிருந்து விலகியிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
அதாவது கடந்த காலங்களில் ஊடகங்களின் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது .அரசாங்கத்தின் மதுவரித்திணைக்களத்தினால் சாராயத்திற்கான விலையை அதிகரித்தமையால் சட்ட விரோதமான முறையில் கசிப்பு பாவனை அதிகரிக்கும் என பொய்யான வதந்தி பரப்பப்பட்டு வந்தது. அதனை பரைச்சாற்றும் வகையில் சில வாரங்களுக்கு முன்பு பிரபல்ய அமைச்சர் ஒருவர் பெருந்தோட்டங்களில் கசிப்பு பாவனை அதிகரித்து இருப்பதாகக் இரத்தினபுரியில் இடம்பெற்ற மேடை கூட்டமொன்றில் ஆதாரமற்று வெறும் வாய்ப்பேச்சுகளில் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த மேதினக் கூட்டங்களில் எந்தவித கட்சியோ அமைச்சர்களோ ஊடகங்களோ மக்களின் இந்த உரிமை தொடர்பாக பேசவில்லை. சாராயக்கம்பனிகளின் பொய்யான வதந்தி மூலம் மக்களின் உரிமை மீறப்படுகின்றது. உரிமை உரிமை என்று பேசுவார்கள் ஆனால் உண்மையான உரிமை மீறல் என்ன என்பதனை பேச தவறவிட்டுவிட்டனர். ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய அமைச்சர்கள் மேதினக் கூட்டத்தில் இது தொடர்பாக பேசினார்கள்.ஆனால் சில ஊடகங்கள் இதை கவனிக்க தவறிவிட்டன.
உண்மையில் நடந்தது என்ன? என்று ஆராய்ந்து பார்க்கும் போது போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் பதுளை மற்றும் ஹட்டன ஆகிய இரண்டு பெருந்தோட்ட பிராந்தியங்களில் 50 பெருந்தோட்டங்களில் நடாத்தப்பட்ட ஆய்வறிக்கையின் படி எந்தவொரு தோட்டத்திலும் கசிப்பு பாவனை இல்லையென்றும், கசிப்பு விற்பனை நிலையங்கள் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.
மக்களின் நம்பிக்கையாக செயற்பட வேண்டிய அமைச்சர்களும், ஊடகங்களும் உண்மையான தகவல்களையே மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
மக்கள் இவ்விடயத்தில் விழிப்புணர்வாகவும், உற்சாகத்துடனும் செயற்படுவதனாலேயே மட்டகளப்பு கல்குடாவில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு வரும் மதுசார உற்பத்திசாலைக்கான எதிர்ப்பு நடவடிகக்கைகளை இன்னமும் மேற்கொண்டு வருகின்றனர்.13 Viewers