சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் 2017 -புகையிலை அபிவிருத்திக்கான அச்சுறுத்தலாகும்

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஒவ்வொரு வருடமும் மே 31ம் திகதி சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. புகைத்தல் பாவனையைக் கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வருவதனை நோக்கமாகக் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனமானது, வருடாந்தம் ஒரு தொணிப்பொருளை முன்வைதட்து மக்களை விழிப்புணர்வடையச்செய்வது குறிப்பிடத்தக்கது. ஆந்த கையில் இம்முறை ‘புகையிலை அபிவிருத்திக்கான தடையாகும்’ என்ற தொணிப்பொருளின் கீழ் மக்களை விழிப்புணர்வடையச் செய்வதற்கு எத்தணித்துள்ளனர்.

புகையிலை பாவனை அபிவிருத்திக்கு எந்தளவு தடையாக அமைந்துள்ளது என்பதனை தெளிவு படுத்தி அனைத்து நாடுகளையும் புகையிலைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்துவதற்கு வலியுறுத்தல் மற்றும் அரசாங்கம் மட்டுமின்றி பொது மக்களும் புகையிலைக் கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இம்முறை பிரதானமான நோக்கமாக அமைந்துள்ளது. அத்தோடு அனைவரினதும் முயற்சியாலும் புகைத்தலிலிருந்து விடுதலையான சூழலை அமைப்பதும் முக்கியமான நோக்கமாகக் கருதப்படுகின்றது.

புகையிலை பாவனை அபிவிருத்திக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள்

• புகைத்தல் பாவனையினால் ஒரு மணித்தியாலயத்திற்கு மூவர் இறக்கின்றனர், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 72 பேர் இறக்கின்றனர் அந்த வகையில் இலங்கை நாட்டில் 25000 இற்கும் மேற்பட்ட கூலிப்படையினர் புகைத்தல் பாவனையினால் வருடமொன்றிற்கு இறக்கின்றனர்.
• சிகரட் புகைப்பவர்களில் இருவரில் ஒருவர் இறப்பதற்கு நேரடி பிரதான காரணமாக அமைவது புகைத்தல் பாவனையாகும். சர்வதே ரீதியாக வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 6 மில்லியன் பேர் புகைத்தல் பாவனையினால் மரணிக்கின்றனர். இத்தொகை 2030ம் ஆண்டளவில் 8 மில்லியன்களாக அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது.
• இலங்கையர்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் வருடாந்தம் 332 மில்லியன் ரூபாய் புகைத்தல் பாவனைக்கு செலவழிக்கின்றனர். குறித்த சிகரட் நிறுவனத்தின் இலாபத்தின் 92% மான பங்குகள் பிரிட்டிஷ் அமெரிக்காவிற்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
• இலங்கையில் புகைத்தலினால் ஏற்படும் நோய்களிலிருந்து நோயாளர்களை காப்பதற்கு சுகாதாரத் துறைக்கு மட்டும் 72 பில்லியன் எனும் பெருந்தொகையை அரசாங்கம் செலவழிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
• சர்வதேச ரீதியாக புகைத்தலின் மூலமான வரி வருமானமாக 269 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டாலும் இதனால் பாதிக்கப்படும் நோயாளர்களுக்காக 1000 அமெரிக்க டொலர்களிற்கும் மேற்பட்ட தொகையை செலவிட நேரிட்டுள்ளது.
• தனிமனித பொருளாதாரத்திலும், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பாரிய தடையாக புகைத்தல் பாவனை அமைகின்றது. இதனால் சுகாதார சீர்கேடு, பொருளாதார குறைவிருத்தி, பணப்பற்றாக்குறை, குடும்ப உறவுகளின் சிதைவு என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றனர். ஏனைய கட்டுமான உற்பத்திகளை மேற்கொள்ளக் கூடிய பெருந்தொகையை நாடளாவிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் புகைத்தல் பாவனையினால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளது.

• சிகரட் புகைத்து புற்று நோய்கள், மரணங்கள் ஏற்படுவதற்கு முன்னரே உதடுகள் கருத்து, கன்னங்களில் குழிவிழுந்து, கண்கள் சிவந்து கலங்கி அவலட்சணமான தோற்றத்தை அடைவதுடன் வாய் துர்நாற்றம், பாலியல் பலவீனம் போன்ற அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. அது மட்டுமின்றி மகிழ்ச்சி மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ நேரிடுவதும் கொடுமையாகும்.
• புகைப்பவர்களில் நான்கு பேரில் ஒருவரிற்கு பாலியல் பலவீனம் ஏற்படுகின்றது. பிரிட்டிஷ் அமரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 30 வயதிற்கும்; 50 வயதிற்கும் இடைப்பட்ட 120000 ஆண்களுக்கு பாலியல் பலவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. (BMJ smoking and reproductive health)
• ஆசிய நாடுகளைப் பொறுத்தளவில் தொற்றாத நோய் என்பது பெரும் சவாலாகும். தோற்றாத நோய்க்கான பிரதான 04 காரணிகளில் புகைத்தல் பாவனை முதற் காரணியாக அமைகின்றது. இதனால் புற்று நோய் மாரடைப்பு, பாரிச வாதம், சுவாச நோய், குருதி அழுத்தம் என பல நோய்கள் ஏற்படுகின்றன.

புகையிலை உற்பத்தி
• புகையிலை உற்பத்திக்கு அதிகமான இரசாயணங்கள் பாவிக்கப்படுகின்றது. இதனால் மண்வளம் அற்றுப் போவதுடன் அரிய வகை உயிரினங்கள் அம்மண்ணில் வாழ்வதும் குறைவடையும்.
• சர்வதேச ரீதியாக வருடமொன்றிற்கு 4.3 மில்லியன் ஹெக்டேயர் நிலம் புகையிலை உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுவதுடன் 2% இற்கும் 4% இற்கும் இடையிலான காடழிப்புக்களும் இடம்பெறுகின்றன.
• புகையிலை உற்பத்தியினால் 2 மில்லியன் டொன்கள் கழிவுகள் தேங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

புகைத்தல் பாவனை
மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் கடந்த 2016ம் ஆண்டு ஆய்வுகளின் படி 31.9 வீதத்தினர் புகைத்தல் பாவனையில் ஈடுபடுகின்றனர், 25-39 வயதிற்கிடைப்பட்ட குழுவினரே அதிகமாக புகைத்தல் பாவனையில் ஈடுபடுகின்றனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இளைஞர்களின் புகைத்தல் பாவனை குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. அத்தோடு கடந்த 10 வருட காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுடன் ஒப்பிடுகையில் புகைத்தல் பாவனையில் 14மூ மான வீழ்ச்சியை இலங்கையில் காண முடிகின்றது. சிகரட் என்கின்ற புகைப்பொருளையே அதிகமாக நுகருகின்றனர். அத்தோடு இலங்கையில் 16-20 வயதிற்கும் இடையிலேயே புகைத்தல் பாவனையை ஆரம்பிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் சாதகமான நிலைப்பாடு,
• சிகரட் பெட்டிகளில் 80% மான எச்சரிக்கை படத்தினை 2015ம் ஆண்டு முதல் அமுல் படுத்தியமை
• சிகரட்டிற்கான வரியை அதிகரித்து ஒரு தனி சிகரட்டின் விலை 55.00 ரூபாவாக அதிகரித்தமை
• தனி சிகரட்டுக்களுக்கான விற்பனையைத் தடை செய்வதற்கு ஆலோசனை வழங்கியுள்ளமை.
• நாடளாவிய ரீதியில் புகைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை.

இலங்கையில் இயங்கும் சிகரட் கம்பனியின் அண்மைக்கால தந்திரோபாயங்கள்

• சிகரட் விலை அதிகரிப்பிலும், தனி சிகரட்டுக்களின் விற்பனையை தடுப்பதனாலும் சடுதியான சிகரட் பாவனை வீழ்ச்சியைக் காண முடியும். இதனால் இலாபத்திலும் வீழ்ச்சி ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிகரட் நிறுவனம் நாட்டிற்குள் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது. அதாவது இச்செயற்பாடுகளினால் பீடி பாவனை மற்றும் சட்டவிரோத சிகரட்டுக்கள் என்பன அதிகரிக்கும் என்கின்ற பிழையான வாதத்தினை முன் வைக்கின்றனர்.
• பீடி பாவனை 9மூ என்கின்ற மிகச்சிறியளவே காணப்படுகின்றது அத்தோடு சிகரட் விலை அதிகரிக்கும் போது பீடி பாவனை அதிகரிக்காது என ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்றன. இன்னுமொறு விடயம் சிந்திக்க வேண்டியுள்ளது, சிகரட்டின் விலை 55.00 எனின் விலை குறைவான 20.00 இற்கு பெறக்கூடிய சிகரட்டுக்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன மாற்றுப்பாவனைக்கு கட்டாயம் மாற வேண்டுமென்றால் பீடி பாவனைக்கு மாற்றமடையாமல் இவ்விலை குறைந்த சிகரட்டுக்களுக்கு பாவனையாளர்கள் மாறலாம் எனினும் அவ்வாறான கருத்துக்களோ, ஆய்வுகளோ வெளியிடப்படவில்லை காரணம் சிகரட்டின் விலை உயரும் சந்தர்ப்பத்தில் பாவனையில் வீழ்ச்சி ஏற்படும் மாறாக பீடி பாவனைக்கோ ஏனைய புகைப்பொருளிற்கோ பாவனையாளர்கள் மாறுகின்றார்கள் என்பது முற்றிலும் பொய்யான ஒரு கருத்தாகும்.
• அதே போன்றுதான சட்ட விரோத சிகரட்டுக்கள் என்பதும், இவை கம்பனிகளால் மேற்கொள்ளப்படும் ஒரு சட்டவிரோத செயலாகும் கடந்த வருடம்; உற்பத்தி செய்யப்பட்ட சிகரட்டுக்களிற்கும் விற்பனையான சிகரட்டுக்களின் எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. மிகுதி சிகரட்டுக்களின் நிலை என்னவாகவிருக்கும்? அதுவும் சட்ட விரோத சிகரட்டுக்களாகவே மாற்றமடைந்திருக்கும். சுத்த இலாபத்தை எதிர்ப்பார்த்து நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இவ்விடயத்தையும் ஒரு அச்சுறுத்தலாக கம்பனிகள் கூறிக்கொண்டிருக்கின்றமை வேடிக்கையாகவே உள்ளது.

அபிவிருத்திக்கு தடையாகவிருக்கும் புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கு எந்தளவு தந்திரோபாயத்தை பயன்படுத்தினாலும் மக்கள் மத்தியில் தெளிவு இருப்பின் புகையிலைக் கட்டுப்பாட்டையும், புகையிலைப் பாவனையிலிருந்து விடுதலையான சூழலையும் உருவாக்கிக்கொள்வது சாத்தியமான விடயமே.26 Viewers