உலக நாடுகளின் புகைத்தல் பாவனை

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்புக்களின் படி 36 வருடங்களுடன் ஒப்பிடுகையில், பிராந்தியங்களின் சிகரட் பாவனையானது 04 பிராந்தியங்களின் பாவனை அதிகரித்துள்ளதோடு 03 பிராந்தியங்களின் பாவனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடுகளை சார்ந்த நாடுகளின் சிகரட் பாவனையானது 52ம% வீதத்தால் அதிகரித்துள்ளது, மத்திய கிழக்கு நாடுகளின் பாவனை 65ம% வீதமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஐரோப்பிய நாடுகளில் 33ம% வீதத்தின் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, அமெரிக்க நாடுகளில் 44ம% வீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, தெற்காசிய நாடுகளில் 24ம% வீதமான அதிகரிப்பு எற்பட்டுள்ளது, மேற்கு பசுபிக் நாடுகளின் புகைத்தல் பாவனையானது 20ம% வீதத்தால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. உலகளாவிய ரீதியில் புகைத்தல் பாவனையின் சாரம்சமாக 1980ம் ஆண்டு தொடக்கம் 2016ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மூன்று ஆண்களில் ஒரு ஆண் இரண்டாம் நிலை புகைத்தலுக்கு ஆளாகின்றனர் அதே போன்று ஐந்து பெண்களில் ஒரு பெண் இரண்டாம் நிலை புகைத்தலினால் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என அனைத்து பாலாரும் இப்பிரச்சினைக்கு ஆளாகின்றனர். வீடுகளில், வேலை செய்யும் இடங்களில் மற்றும் உணவு விடுதிகளில் இரண்டாம் நிலை புகைத்தலுக்கு ஆளாகின்றனர் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால்; உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 884,000 பேர் மரணிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நிலை புகைத்தல் என்பது சாதாரணமான ஒன்றாக அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்றது. குறிப்பாக, ஆசிய நாடுகளில் விஷேடமாக இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் 80ம% வீதமானோர் உணவு விடுதிகளினாலேயே இரண்டாம் நிலை புகைத்தலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக கர்ப்பினி பெண்கள் இரண்டாம் நிலை புகைத்தலுக்கு ஆளாகும் சந்தர்ப்பத்தில் கருவிலிருக்கும் குழந்தையின் எதிர் மறைவான விளைவு அதிகமாகும்.

புகையிலை பாவனையினால் வருடமொன்றிற்கு சர்வதேச ரீதியாக 7.1 மில்லியன் தொகையான மக்கள் இறக்கின்றனர் 6.3 மில்லியன் இறப்புக்கள் நேரடியாக சிகரட் பாவனையினால் ஏற்படுகின்றது, அதில் 5.1 மில்லியன் ஆண்களும் 2 மில்லியன் பெண்களும் அடங்குகின்றனர். இறப்புக்கள் மாத்திரமின்றி பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் புகையிலை பாவனையினால் ஏற்படுகின்றது புற்று நோய்கள், சுவாச நோய்கள், மற்றும் சமூக சீர்கேடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்தளவில், வருடமொன்றிற்கு புகையிலை உற்பத்தியான சிகரட் புகைப்பதற்கு 332 மில்லியன் ரூபாய் இலங்கை வாழ் மக்களால் செலவிடப்படுகின்றது, இதிலும் 96 வீதமான இலாபத் தொகை தாய் நிறுவனங்கள் அமைந்துள்ள பிரித்தானியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு வழங்கப்படுகின்றது. இருப்பினும் இப்பாவனையினால் பாதிக்கப்படுவோருக்கு கிட்டத்தட்ட 72 பில்லியன் இலங்கை ரூபாய் அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளது இதனால் வருடா வருடம் இலங்கை அரசாங்கம் நட்டத்தை தழுவுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகலாவிய ரீதியில் சிகரட் நிறுவனங்கள் 269 பில்லியன் டொலர்கள் வரியாக செலுத்தினாலும் இதன் மும்மடங்கு இப்பாவனையின் விளைவுகளை சீர்செய்வதற்கு அரசாங்கங்கள் செலவிட வேண்டியுள்ளது என இலங்கையின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் மாத்திரம் சிகரட் பாவனையினால் இரு மணித்தியாலயத்திற்கு மூவர் இறக்கின்றனர், வருடா வருடம் கிட்டத்தட்ட 26000 – 26500 இற்கும் இடையிலான தொகை மக்கள் இறப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு சிகரட் புகைக்கும் நால்வரில் ஒருவருக்கு பாலியல் பலவீனம் ஏற்படுவதோடு பல்வேறு குறுகிய கால தாக்கங்களுக்கும் ஆளாகின்றனர். பிரித்தானியாவில் 30 தொடக்கம் 35 வயதிற்கு இடைப்பட்டோரில் 120000 பேரிற்கு பாலியல் பலவீனம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



107 Viewers