எந்த அளவாக இருந்தாலும் மதுசாரம் அருந்துவது பாதிப்பானதாகும்.
கொஞ்சம் குடித்தால் பரவாயில்லை என சமூகமயமாக்கப்பட்டுள்ளது. அதாவது சில சுகாதார ஆலோசகர்கள், கருத்தியலாளர்கள் இவ்வாறானதொரு நம்பிக்கையை பரப்புவதற்கான முக்கிய நபர்களாக காணப்படுகின்றனர். சில கருத்தரங்குகளிலும் கூட இவை கூறப்பட்டு வந்தமைக் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஆய்வுகளை மையமாக வைத்தே இதனை கூறிவந்தனர். எனினும் அந்த ஆய்வுகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் விஞ்ஞானப்பூர்வமான ஆய்வொன்று அண்மையில் வெளியிடப்பட்டது.
குறிப்பட்ட அளவு மதுசாரம் அருந்துவது பாதிப்பற்ற பாவனை என இது வரை காலமும் வாதாடி வந்தனர். எனினும், அண்மையில் செயற்படுத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் எந்த அளவு மதுசாரம் அருந்தினாலும் அது பாதுகாப்பற்ற பாவனை என கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட அளவு மாத்திரம் மதுசாரம் அருந்துவதானது இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு சிறந்ததொரு முறை என வாதிட்டு வந்தனர். இருப்பினும் அவை புற்று நோய் மற்றும் ஏனைய நோய்களுக்கான பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாவனை என கண்டறியப்பட்டுள்ளது.
Moderate Drinking இனால் ஏற்படும் பாதிப்புக்கள்.
Global Burden of Disease என்கின்ற ஆய்வானது, அருந்தும் மதுசாரத்தின் அளவு மற்றும் சுகாதார சீர்கேடுகளைப் பற்றி இங்கிலாந்து உட்பட 195 நாடுகளில் ஆய்வு செய்தது. 1990 இற்கும் 2016 இற்கும் இடையிலேயே இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15 வயதிற்கும் 95 வயதிற்கும் இடைப்பட்டோரிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், முற்றிலும் குடிக்காதவர்களையும் ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் குடிப்பவர்களையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது.
ஆரம்ப காலங்களில் வௌ;வேறுபட்ட ஆய்வுகள் தமது முடிவுகளை முன்வைத்திருந்தாலும், எந்தளவு மதுசாரம் அருந்தினாலும் அது புற்று நோய் மற்றும் ஏனைய சுகாதார தாக்கங்களை ஏற்படுத்தும் அச்சுறுத்தலிற்குரியது ஆகும் என இந்த ஆய்வின் மூலம் ஒப்புவித்துள்ளனர்.
பேராசிரியர் செக்சேனாவின் கருத்து: ‘அளவான ஃ பாதுகாப்பான மதுசார பாவனை என்பது பற்றி இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகம் கவனம் செலுத்துவர் எனினும் இந்த ஆய்வின் படி, பாதுகாப்பான மதுசார பாவனை என்று ஒரு அளவு இல்லை (there is no safe limit)
பெண்களின் மதுசார பாவனை தொடர்பான ஆய்வின் முடிவுகள்.
பெண்களின் மதுசார பாவனை தொடர்பான ஆய்வின் முடிவுகள்.
From : https://www.bbc.co.uk/news/health-45283401
125 Viewers