எந்த அளவாக இருந்தாலும் மதுசாரம் அருந்துவது பாதிப்பானதாகும்.

கொஞ்சம் குடித்தால் பரவாயில்லை என சமூகமயமாக்கப்பட்டுள்ளது. அதாவது சில சுகாதார ஆலோசகர்கள்இ கருத்தியலாளர்கள் இவ்வாறானதொரு நம்பிக்கையை பரப்புவதற்கான முக்கிய நபர்களாக காணப்படுகின்றனர். சில கருத்தரங்குகளிலும் கூட இவை கூறப்பட்டு வந்தமைக் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஆய்வுகளை மையமாக வைத்தே இதனை கூறிவந்தனர். எனினும் அந்த ஆய்வுகளை எல்லாம் முறியடிக்கும் வகையில் விஞ்ஞானப்பூர்வமான ஆய்வொன்று அண்மையில் வெளியிடப்பட்டது.

குறிப்பட்ட அளவூ மதுசாரம் அருந்துவது பாதிப்பற்ற பாவனை என இது வரை காலமும் வாதாடி வந்தனர். எனினும், அண்மையில் செயற்படுத்தப்பட்ட ஆய்வூகளின் அடிப்படையில் எந்த அளவு மதுசாரம் அருந்தினாலும் அது பாதுகாப்பற்ற பாவனை என கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவூ மாத்திரம் மதுசாரம் அருந்துவதானது இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு சிறந்ததொரு முறை என வாதிட்டு வந்தனர். இருப்பினும் அவை புற்று நோய் மற்றும் ஏனைய நோய்களுக்கான பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பாவனை என கண்டறியப்பட்டுள்ளது.



57 Viewers