எம்மைப்பற்றி

நவீன யுகத்தில் இணையத்தளங்கள் முழு உலகையும் அடக்கிவைத்திருக்கும் போது மதுசாரம் மற்றும் சிகரட் கம்பனிகள் உட்பட கஞ்சா , ஹெறோயின் போன்ற போதைப் பொருள் வியாபாரிகள் இதனை சாதகமாக பயன்படுத்தி தங்களின் விளம்பரங்களை மேற்கொள்கிறார்கள் .

ஆனால் மதுசாரம் மற்றும் சிகரட் , ஏனைய போதைப் பொருட்களை தடுப்பதற்கான வழி முறைகள் நாளுக்கு நாள் விருத்தி அடைந்து வருவதும் குறைவு. அது தொடர்பான அறிவு பரிமாறல்களுக்குரிய மூல வளங்கள் தமிழ் மொழியில் மிகவும் குறைந்தே காணப்படுகின்றன. இருக்கின்ற ஒரு சில மூல வளங்களும் நோக்கத்தினை மறந்து செயற்படுவது போல் தென்படுகின்றது.

இவற்றைக் கருத்திற்கொண்டும், எமது அனுபவ அறிவை வைத்துக் கொண்டும் பயன் தகு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக துணை புரியும் நோக்கில் நிதர்சனம் இணையத்தளம் உருவானது.

அதாவது கட்டுரை , நகைச்சுவை , காணொளிகள் ,செய்திகள் , கவிதைகள் , நேர்காணல்கள் …. என பல வடிவில் ஆக்கங்கள் பதியப்பட்டு ஒரு ஆக்கப்பூர்வமான வழிகாட்டியாகவும், தகவல்களை பரிமாறும் ஊடகமாகவும் நிதர்சனம் தனது சேவையை தொடரும்.

நிதர்சனம் இணையத்தளத்தின் நோக்கமானது, சமூகத்தினை ஏமாற்றும் சக்திகளான மதுசாரம் , சிகரட் கம்பனிகள் உட்பட ஏனைய போதைப் பொருள் வியாபாரிகளின் பிடியில் இருந்து சமூகம் விடுபட்டு, மேற் குறித்த போதைப் பொருட்களின் போலி விம்பத்தினை களைந்து அதன் உண்மையை உலகறிய செய்வதாகும் .

இனி என்ன? அழுத்துங்கள் !! அனுபவியுங்கள்!!