கொவிட் 19 தொற்று காலப்பகுதியில் மதுசாரப்பாவனையாளர்களிடம் ஏற்பட்ட சாதகமான மாற்றங்கள்

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் இன்று உலகத்தையே உலுக்கியுள்ளது. அனைத்து விதமான வியாபார மற்றும் சேவை மையங்களும் முடக்கபட்டு ஒரு ஸ்தம்பிதமான நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் கொரேனா தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காகவும், தொற்றுக்கு உள்ளாகியோர்களை காப்பாற்றுவதற்கும் அனைத்து தரப்பினரும் இணைந்து உழைத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சில சட்ட நடவடிக்கைகளினால் எதிர்மறையான சில விடயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அச்சட்டங்கள் எமது உயிரைப் பாதுகாக்கவே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை நாம் உணர வேண்டும். அதே போன்று அச்சட்ட திட்டங்களின் விளைவாக பல்வேறு நன்மைகளும் இடம்பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டமையினால் அனைவரும் வீட்டிலிருக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது, இதனால் தந்தையின் பாசத்திற்கு ஏங்கிக்கொண்டிருந்த எத்தனையோ பிள்ளைகளின் அவா நிறைவேறியுள்ளது. தனது தந்தையுடன் நேரத்தை செலவிட முடிகின்றது என சில பிள்ளைகள் பெருமிதம் கொள்வதை கண்களால் காணக்கூடியதாகவுள்ளது. அது மட்டுமின்றி தொழிலுக்கு செல்லும் தாய்மார்கள் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடிகின்றமையை பெரும் வாய்ப்பாக நினைக்கின்றனர்.

ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் சில உறவுகள் சரியாக பேசிக்கொள்ளாமல், சில மன வருத்தங்களுடன் பிரிந்து வாழ்ந்து வந்த வேளையில் ஊரடங்கு வேளையில் ஒன்றாக ஒற்றுமையுடன் வாழும் காட்சிகளும் கூட இடம்பெற்றுள்ளன.


விஷேடமாகக் குறிப்பிட வேண்டிய இன்னுமொரு விடயமும் இருக்கின்றது. இக்காலக் கட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படுத்தும் அபாயமாக மதுசாரம் அமைந்துள்ளமை சுகாதார ரீதியாக ஒப்புவிக்கப்பட்டதன் பின்னர் அனைத்து மதுசாரசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன. அதனையடுத்து மலையகத்தில் பல மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் பதிவாகின. மதுசாரத்திற்கு மாத்திரம் செலவழித்து விட்டு தனது வீட்டைக் கவனிக்காத தந்தைமார் தற்போது வீட்டை மாத்திரம் கவனிக்கின்றனர்.

மதுசார சாலைகளுக்கு மாத்திரம் தனது பணத்தை கொண்டு சேர்த்தோர் அடிப்படைத் தேவையான உணவிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர், குடித்து விட்டு ஏற்படுத்தும் வன்முறைகளிலிருந்து எத்தனையோ பெண்களும், சிறுவர்களும் காப்பாற்றப்பட்டுள்ளனர். வருமானம் ஈட்ட முடியாத இந்த நாட்களில் சில நிவாரண உதவிகளைப் பெற்று, கடன் பெற்று, விவசாயம் செய்து தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். ஆனால் இந்த நேரத்தில் மதுசார சாலைகள் தி;றந்திருப்பின் அவ்வாறு மிகவும் கடினப்பட்டு பெற்றுக்கொள்ளும் சிறிய தொகையும் மதுசாரத்திற்கு சிலரால் செலவழிக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் தற்போது மதுசார சாலைகள் திறக்கப்பட்டுள்ளன, அவை திறக்கப்பட்டிருந்தாலும் மதுசாரம் அருந்துவோர் மத்தியில் மாற்றத்தை கொண்டு வரவேண்யெ பொறுப்புடையnhர்களாகவே அனைவரும் செயற்பட வேண்டியுள்ளது. எனினும், நாம் எழுமாறாக மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் படி மதுசாரசாலைகள் மூடப்பட்டிருந்த நாட்களில் பிள்ளைகளும், பெண்களும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது, மற்றும் சில மதுசார பாவனையாளர்கள் இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி பாவனையில் இருந்து விடுதலையாவதற்கு திட்டமிட்டுள்ளனர் என்பதையும் நாம் அறியப்பெற்றோம்.

மேலும், கொவிட் 19 தொற்றினால் நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில் 80% வீதமான மதுசார பாவனையாளர்களும், 68ம% வீதமான புகைப்பொருள் பாவனையாளர்களும் பாவனையைக் குறைத்துள்ளனர். என்கின்ற ஆய்வின் முடிவு எமக்கு கிடைத்துள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது (ADIC) கொவிட் 19 காலப்பகுதியில், மதுசாரம் (சட்ட மற்றும் சட்ட ரீதியற்ற), புகைத்தல் பாவனையாளர்களிடத்திலும், அவர்களின் குடும்பத்தாரிடையேயும் பாவனை மற்றும், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டது.
இவ் ஆய்வானது மே மாதம் 01ம் திகதி தொடக்கம் மே மாதம் 10 திகதி வரை நாட்டின் 25 மாவட்டங்களிலும் 2019 மதுசாரம் மற்றும் புகைப்பொருள் பாவனையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் இறுதி முடிவுகளிற்கு ஏற்ப கொவிட் 19 தொற்றின் காரணமாக முழுநாடும் முடக்கப்பட்டு இருந்த காலப்பகுதியில் மதுசார பாவனையாளர்களில் 80மூ வீதமானோர் பாவனையை குறைத்திருந்ததுடன் சிகரட் பாவனை 68 வீதமாக குறைந்து இருந்தது.

மதுசாரப் பாவனையை குறைத்தவர்களில் 37% வீதமானோர் கொவிட் 19 தொற்று நிலைமை நீங்கும் போதும் மதுசாரப் பாவனையை குறைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து செல்வதாக தெரிவித்திருந்தனர்.

சிகரட் பாவனையாளர்களின் 51% வீதமானோர் இந்த அசாதாரண நிலமை நீங்கியதன் பின்னரும் சிகரட் பாவனையை குறைக்கும் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக தெரிவித்திருந்தனர்.

மதுசாரம் அருந்துபவர்களின் மனைவியர்களின் கருத்திற்கேற்ப கணவர்களின் மதுசாரப் பாவனை குறைந்ததன் காரணமக வீட்டில் சண்டைகள் குறைவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளதுடன், குடும்பத்தினுள் பணம் சேமிக்கப்பட்டதாக 40% வீதமானோர் தெரிவித்திருந்தனர்

மேற்குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில் மதுசாரம் மற்றும் புகையிலை பெற்றுக் கொள்வதற்கு இருக்கும் வாய்ப்பு குறைவதானது, பாவனையில் ஈடுபட்டு இருப்பவர்களின் பாவனை குறைப்பதற்கோ அல்லது நிறுத்துவதற்கோ காரணமாக அமையும்.

சாதாரண சந்தர்ப்பங்களில் பாவனையில் இருந்து விலகியிப்தற்கு அல்லது அந்த அனுபவத்தை பெற்றுக் கொள்வதற்கு கஸ்டமாக இருப்பினும் கொவிட் 19 தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் பாவனையிலிருந்து விலகியிருக்கும் அனுபவத்தை உணர்வதற்குரிய வாய்ப்புக் கிடைத்தமையானது, பாவனையிலிருந்து விடுதலையானதன் பின்னர் ஏற்படும் சுகத்தை உணர்வதற்கான ஓரு சந்தர்ப்பமாகும்.
மேற்குறிப்பிட்ட பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தடங்கள்களை ஏற்படுத்தும் போது சர்வதேச ரீதியாக மதுசாரம் மற்றும் புகையிலை வியாபாரிகள் எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கான காரணம், கூடுதலான பாவனையாளர்கள் குறிப்பிட்ட பொருட்கள் இல்லாமல் வாழுவதற்கு முடியும் என்பதை அறிந்து கொள்வார்கள்.

மேலும் முக்கியமாக அப்பொருட்களின் பாவனையிலிருந்து விடுதலையாவது, பாவனையாளர்களின் வாழ்கையை சுகமாக்கும் என அறிந்து பாவனையிலிருந்து விலகுவார்கள் என்பதனால் ஆகும்.

மதுசாரம் இன்றி இருக்கவே முடியாது என்று கூறியோரும் இப்போது மதுசாரம் அருந்தாமல் இருந்தனர் என்பதுதான் உண்மை. மாற்ற முடியாதது என்று எதுவுமே இல்லை. ஆகவே மனிதனின், குடும்பத்தின், சமூகத்தின், நாட்டின் பொருளாதாரத்தையும், மகிழ்ச்சியையும் சீர்குழைக்கும் மதுசாரம் மற்றும் புகைப்பொருள் பாவனையிலிருந்து இப்போதாவது விடுதலையாவதற்கு முன்வருவோர் மாற்றத்தை அனுபவிப்பார்கள்.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்114 Viewers