தாய்லாந்தில் சக குடும்ப உறுப்பினர்கள் உள்ள வீட்டில் இனி புகைக்க முடியாது

வீட்டில் புகைப்பிடிப்பவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் உடல்நலத் தீங்கை வன்முறையாகக் கருதுகிறது தாய்லாந்தின் புதிய சட்டம். இந்தச் சட்டம் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடப்புக்கு வந்துள்ளது.

குற்றத்தை மீறுபவர்கள் குற்றவியல் நீதிமன்றத்திலும் குடும்ப நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படலாம் என்று அந்நாட்டின் பெண்கள் விவகாரம் மற்றும் குடும்ப மேம்பாட்டுக்கான அமைச்சர் லெர்பான்யா பூர்னாபுண்டிட் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்குள் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கையைக் குறைந்தது 30 விழுக்காடு குறைக்க தாய்லாந்து முற்பட்டுள்ளது.40 Viewers