பணம் எங்கே செல்கிறது?
குறிப்பாக கிராமப்பகுதிகளில் மக்களின் முன்னேற்றத்தை விடவும் மதுசாரசாலைகளின் முன்னேற்றம் துரிதமாக காணப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பின் படி 04 பிரதேசங்களில் மாத்திரம் மதுசாரத்திற்கு மாதாந்தம் இலங்கை ரூபா 3,500,000.00 எனும் பெருந்தொகையை செலவழிக்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தினமும் அல்லல் படுகின்றனர். அப்பாவி மக்களை ஏமாற்றி மதுசாரசாலைகள் அவர்களின் பணத்தை சூரையாடிச் செல்கின்றன. அந்த பிரதேசத்தில் அமைந்திருக்கும் மதுசாரசாலைகளின் உரிமையாளர்கள் ஏழைகளின் பணத்தில் விரைவாக செல்வந்தர்களாகின்றனர். அது மட்டுமின்றி இளம்பராயத்தினரை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மதுசார நிறுவனங்களுடன் இணைந்தும் செயற்படுத்துகின்றனர். இது போன்ற துரோகமான செயற்பாடுகள் எந்தவொரு பிரதேசத்திலும் இடம்பெறாமல் பாதுகாப்பதற்கு இளைஞர்களும், பெற்றௌர்களும், இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களும் முன்வர வேண்டும். இவை ஆங்காங்கே ஒவ்வொரு மாவட்டங்களையும் பிரதேசங்களையும் இலக்கு வைத்து எய்தப்படும் அம்பு.
ஆனால் முழு நாட்டையும் இலக்கு வைத்து சிகரட் மற்றும் மதுசார நிறுவனங்கள் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து மக்களை ஏமாற்றி எமது மக்களின் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றமைக் குறிப்பிடத்தக்கது. சாராயம், பியர், மற்றும் சிகரட் என்பவற்றிற்காக தினமும் 990 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகின்றது. இது எமது நாட்டின் கூலிப்படையினர் செலவழிக்கும் பணத்தொகை என்பதைக் கருத்திற்கொள்ளவும்.
போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகளுக்கான முயற்சிகளும், ஆர்வமும் அதிகமாக இருக்கின்றன எனினும் சாராயம், பியர் மற்றும் சிகரட் ஆகியவற்றின் தாராளத்தன்மையும், விலை நிர்ணயங்களின் தாமதங்களும் இவற்றிற்கு காரணமாக அமைகின்றன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் இவற்றின் விலை அதிகமாகும். ஆனால் இலங்கையின் கொள்வனவுத் திறனுக்கு அமைய ஏனைய பொருட்களின் விலையேற்றத்தை போல சாராயம், பியர் மற்றும் சிகரட் வகைகளுக்கான விலைகள் உயர்வடையவில்லை. இவற்றின் விலை அதிகரிக்கும் போது இவற்றை ஆரம்பிக்கும் அளவு குறைவடையும் என ஆய்வுகளில் ஒப்புவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இப்பாவனைகளை ஆரம்பிக்கும் வீதத்தைக் கட்டுப்படுத்தி சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதே நிரந்தரமான மாற்றத்திற்கும் வழிகவகுக்கும். இவற்றை தவிர இப்பாவனைகளை ஊக்குவிக்கும் அனைத்து காரணிகளையும் கட்டுப்படுத்த பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்வர வேண்டும் அவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மக்கள் உழைக்கும் பணத்தை அவர்களுள் தக்க வைத்துக்கொள்ள முடியுமானதாக இருக்கும். அதனை தவிர்த்து எந்த அளவு வருமானம் உயர்ந்தாலும் இது போன்ற மோசடி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி பணத்தை சூரையாடி விடுவர். இது போன்ற நிறுவனங்களினால் இன்னமும் வறுமைக் கோட்டிற்கு கீழான மக்களாக வாழ்வதற்கு எவரும் தயாராக இல்லை.
90 Viewers