பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனரா?

பெண் என்பவள் சக்தியின் அம்சம். உலகத்திற்கு தேவையான சக்தியை அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவளாக பெண் இருக்கின்றாள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே வளர்ச்சியில் முதன்மையாக இருக்கின்றனர் என்பது விஞ்ஞான ரீதியாக ஒப்புவிக்கப்பட்டுள்ளது. சாதனை பெண்களின் அறிவை வளர்க்கும் இடமான பாடசாலைகளில் கூட பெண்களே முதன்மை வகிக்கின்றனர் இதற்கு காரணம் அவர்களின் விடா முயற்சியும், பொறுமையுமே ஆகும். ஏனையோரின் கவனத்தை ஈர்த்தல், ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் அழுக்காமல் கேட்டு உண்மையை ஆராய்தல், மற்றும் அதீத கிரகித்தல் சக்தி, கூர்மையான அவதானிப்பு ஆகியன பெண்களிடம் காணப்படும் விஷேட அம்சங்களாகும்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவது பெண்களினாலேயே என்பது திண்ணம் ஏனெனில் பெண்கள் தோழமை உணர்வு அதிகம் கொண்டவர்கள் யாருடனும் மிக விரைவில் தோழமையுடன் பழகிக்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் கூடிய சக்தியுள்ளவர்கள் இதனாலேயே பிறந்த வீட்டு உறவுகளையும் புகுந்த வீட்டு உறவுகளையும் சமாளித்து வாழவியலை அழகாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தனை வல்லமை மிக்க பெண்கள் இறந்த காலங்களில் தங்கி வாழ்ந்த, உரிமைகள் மறுக்கப்பட்ட சனமாக இருந்தன்ர் எனினும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து சட்டங்களை இயற்றி ஆண்களுக்கு நிகரானவள் பெண் என உலகம் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு உயர்ந்துள்ளனர் பெண்கள். 1948ம் ஆண்டு கைக்கொள்ளப்பட்ட அனைவருக்குமான மனித உரிமைகள் சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவதை உள்ளடக்கியிருந்தது. இதனைத்தழுவி 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவை மகளிருக்கெதிரான அனைத்து பாகுபாட்டினையும் அகற்றி பொதுவிணக்க உடன்பாட்டை நிறைவேற்றியது. பன்னாட்டு மகளிருக்கான உரிமைச்சட்டம் என விவரிக்கப்பட்ட இந்த உடன்பாடு 1981ம் ஆண்டு செயலாக்கத்திற்கு வந்தது. 2003ம் ஆண்டு மொசாம்பிக்கின் மபுடோவில் இடம்பெற்ற இரண்டாவது ஆபிரிக்க ஒன்றிய மாநாட்டில் ‘மபுடா நெறிமுறை’ என்று பரவலாக அறியப்படும் ஈபிரிக்க மகளிருக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான ஆபிரிக்க உரிமை முறையின் நெறிமுறை நிறைவேற்றப்பட்டது. குறிப்பிட்ட சட்டமானது 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்று நடப்பிற்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. அனைத்து சட்டங்களின் வாயிலாகவும் சரிசமமான தொழில் புரிதல், சமமான ஊதியம் பெறல், சொத்துரிமை, சட்ட ஒப்பந்தங்கள் செய்யும் உரிமை, மணவாழ்வு மற்றும் குழந்தை வளர்ப்பு உரிமை மற்றும் சமய சுதந்திரம் என் அடுக்கிக்கொண்டு செல்லும் சில உரிமைகளை வென்றெடுத்துள்ளனர்.

இருப்பினும் சில பெண்கள் இன்னமும் தனது உரிமைகள் பறிக்கப்பட்ட நிலைமையில் சகித்துக்கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலையில் வாழுகின்றனர். உடல் மற்றும் மன சுதந்திரத்தை வென்றெடுத்துவிட்டதாக எண்ணிக்கொண்டிருக்கும் சமூகம் மத்தியில் இன்னமும் சில பெண்வர்க்கம் நிம்மதியற்ற, தங்கிவாழ வேண்டிய, கஷ்டங்களை தாங்கிக்கொள்ளக்கூடிய ஒரு துர்ப்பாக்கிய சூழ்நிலையில் வாழுகின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயமே. இதன் படி பார்த்தால் சில பெண்களுக்கு மனித உரிமையே மீறப்படும் நிலைமை காணப்படுகின்றது. மனித உரிமை என கூறுவது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களுமாகும். ‘மனிதர்கள் மனிதர்களாக பிறந்த காரணத்தினால் அவர்களுக்கு கிடைத்த அடிப்படையான, விட்டுக்கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக கருதப்படுகின்றன’. இது எத்தனை பெண்களுக்கு மறுக்கப்படுகின்றது என்பதை அறிவீர்களா? மறுக்கப்படுகின்றவையும் பெண்களாலேயே மறைக்கப்படுகின்றது என்பதை அறிவீர்களா?

ஆம் தான் விரும்பும் மண வாழ்க்யையை தேர்ந்தெடுக்கும் உரிமையை பெண்களுக்கு சமூகம் வழங்கியிருக்கின்றது. இருப்பினும் இன்னமும் சில சமூகம் அதனை மறைமுகமாக மறுக்கின்றது. என்னதான் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் மகிழ்ச்சியை மட்டுப்படுத்திக்கொண்ட மதுசார பாவனையில் ஈடுபடுகின்ற ஒரு நபரை திருமணம் செய்யும் ஒரு பெண்ணின் தனிமனித சுதந்திரமே பறிபோய்விடுகின்றது. மதுசாரம் அருந்தும் ஆணிடம் ஒவ்வொரு விடயத்தையும் அசௌகரியமாகவே பகிர்ந்துக்கொள்வாள் ஏன் தாம்பத்திய உறவை கூட மிகவும் அசௌகரியமாகவே பகிர்ந்துக்கொள்கின்றாள் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மதுசாரம் அருந்தும் கணவனுடன் குடும்பத்தைக் கொண்டு செல்லும் அநேகமான பெண்கள் சுதந்திரமின்றி ஒரு நிம்மதியற்ற வாழ்க்கையையே நடாத்துகின்றனர் காரணம், சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை மதுசாரம் அருந்துவதற்காக செலவழிக்கின்றனர். அதாவது குறிப்பிட்ட ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ள 03 மதுசார சாலைகளில் ஒரு நாள் வருமானமாக 20,99,700.00 ஆகும் இவை அனைத்துமே பெண்களை கஷ்டத்தில் ஆழ்த்திவிட்டு குடும்ப கஷ்டங்களை பெண்கள் மீது சுமத்திவிட்டு ஆண்கள் தேவையற்ற ஒரு விடயத்திற்கு கொண்டு அழிக்கும் ஒரு பெருந்தொகையான பணத்தொகையாகும். இது போன்ற எத்தனை மதுசார சாலைகள் தினமும் பெண்களை நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ வைத்துவிட்டு இலாபம் ஈட்டுகின்றது? ஆனால் இவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டு வீட்டு பொருளாதாரத்தை கவனிக்க வேண்டும், உணவு வேளைகளை கவனித்துக்கொள்ள வேண்டும், பிள்ளைகளின் கல்வியைக் கவனித்துக்கொள்ள வேண்டும், பிள்ளைகளுக்கு தேவையான உடைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும், பண்டிகைகள் வந்தால் தான் குடும்பமும் ஏதோ ஒரு வகையில் அதனை கொண்டாட வேண்டும் என் சிறுக சிறுக சேமித்து சமாளிக்க வேண்டும் எத்தனை எண்ணங்கள் எதிலுமே நிம்மதியில்லை, சந்தோஷமில்லை பெண்களின் உரிமைகள் மீறப்படும் பிரதான சந்தர்ப்பமே இதுவாகும். அது மட்டுமா சுத்தமான காற்றை சுவாசிப்பதற்கு கூட உரிமையற்றவர்களாக பெண்வர்க்கம் ஆளாக்கப்படுகின்றது , சிகரட் புகைக்கும் நபர் வாழும் சூழலில் வாழுகின்ற பெண் குறிப்பாக கர்ப்பவதிகள் சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமை கூட மீறப்படுகின்றது.
அது மட்டுமல்ல பெண்களின் உரிமை என போலிகளை வடிவமைத்துக்கொண்டு அதற்காக போராடவும் தூண்டுகின்றது. ஓரிரு மாதங்களிற்கு முன்னர் இலங்கையில் பெண்கள் மதுசார நிலையங்களில் பணிபுரிதல் மற்றும் மதுசாரம் கொள்வனவு செய்வதற்காக விற்பனை நிலையங்களிற்குச் செல்வது போன்றவற்றை தடைசெய்து இருப்பதானது பெண்களின் சமத்துவ அந்தஸ்த்தை குறைக்கும் செயலாக உள்ளது என சில பெண்களை கொண்டே எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட சந்தர்ப்பம் நினைவு இருக்கும்.
இவ்விடயத்தை நேரடியாக நோக்கும் போது ஆண்கள் மதுசார நிலையங்களில் வேலை செய்வதற்கும்,கொள்வனவு செய்வதற்கும் உரிமை பெற்றுள்ளனர். அவர்கள் இந்த உரிமையைப் பெற்று இருப்பதனால் அடைந்திருக்கும் நன்மை என்ன என நாம் முதலில் அறியவேண்டும். பொருளாதார, சுகாதார, சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளிற்கு முகங்கொடுக்கின்றனர்.
பெண்கள் ஏதாவது ஒரு உரிமையை வென்றெடுக்க வேண்டுமாயின் அந்த உரிமையின் காரணமாக பெண்களிற்கு நன்மை கிடைக்க வேண்டும்.அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து உயர்வான நிலைக்கு செல்ல வேண்டும்.ஆனால் பெண்கள் மதுசாரம் அருந்துவதால் ஆண்களை விட துரித கதியில் பல நேய்களிற்கு ஆளாக கூடிய உடல் அமைப்பை கொண்டவர்கள் என்று விஞ்ஞான ரீதியாக ஒப்புவிக்கப்பட்டுள்ளது,அது மட்டுமின்றி ஏனைய சமூக சீர்கேடுகள் ஏற்படுவதும் உறுதி ஏனெனில் ஆண்கள் மதுசாரம் அருந்தும் போது ஏற்படுகின்ற சமூக விளைவுகள் தொடர்பில் அனைவரும் அறிந்ததே.
மதுசார நிலையங்களில் விற்பனை செய்வது மட்டுமல்ல தொழில் ஏனைய தொழில்களும் உள்ளன என பலரின் தர்க்கங்கள் இருக்கின்றது,எனினும்; எந்தவகையான தொழிலாக இருந்தாலும் பெண்கள் மதுசார விற்பனை நிலையங்களில் தொழில் புரியும் போது சமூகத்தில் உள்ள அதிகமானோரை கவரக்கூடிய ஒருநிலை ஏற்பட்டு மதுசார நிறுவனங்களுக்கு அதிக இலாபம் ஈட்டக் கூடிய நிலைமை உருவாகிவிடும் என்பது உறுதி.
பெண்கள் சமத்துவத்துடன் ஒப்பிட்டு விளம்பரப்படுத்த முற்படுவது மதுசாரக் கம்பனிகளின் ஓரு ஏமாற்றுவித்தையா? என்பதை அறிய புகையிலைக் கம்பனியின் கடந்த கால வரலாறு சான்றாக அமைந்துள்ளது. 1928 ம் ஆண்டு அமரிக்காவில இயங்கும்; சிகரட் நிறுவனத்தின்; தலைவர் அருடைய இலக்கு பற்றி சிந்திக்கும் போது,பெண்களிற்கு சிகரட் புகைக்க பழக்க வேண்டும் என்ற விடயத்தை கண்டறிந்தார். ஓரு சந்தர்ப்பத்தில் அது பற்றி குறிப்பிடுகையில் பெண்களிற்கு சிகரட் புகைக்க பழக்கினால் ‘தனது வீட்டுக்கு முன்னால் தங்க ஆறு ஓடுவதற்கு சமம்’எனக் குறிப்பிட்டார். பின்னர் அவர் ‘யோச் வேசின்டனில்’தற்போது தொடர்பாடல் துறையின் தந்தை எனக் கருதப்படும் ‘எட்விட் வேனஸ்’என்ற மேதையிடம் சென்று இந்த செயற்திட்டத்தை கையளித்தார். அவர் பிரபல உளவியலாளர் ‘ஏ.ஏ பிறேல்ஸ்’என்பவரிடம் ஆலோசனை கேட்டார்.அதற்கு அவர் பெண்களிற்கு சிகரட் புகைக்க பழக்க வேண்டுமாயின் பெண்கள் அதிகம் உணர்ச்;சிவசப்படும் விடயமான பெண்களின் உரிமையுடன் தொடர்புபடுத்தி இவ்விடயத்தை புகுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.பின்னர் 1989ம் ஆண்டு நிவ்யோர்க்கில் இடம் பெற்ற ஈஸ்டன் பேரணியில் ‘பாலியல் சமத்துவமின்மை என்கின்ற பறிக்கப்பட்ட உரிமைக்காக ஒரு விளக்கு ஏற்றுவோம்’என்ற தொணிப்பொருளில் சாதாரணமான அழகுடைய பெண்களை தெரிவு செய்து பேரணிகள் செல்லப்பட்டது, அப்பேரணிகளில் கலந்துக்கொண்ட பெண்களின் கைகளில் இலவசமாக சிகரட் வழங்கினார்கள். ஏனென்றால் இது ஒரு விளம்பரமாக இல்லாமல் சாதாரண பெண்களின் உரிமைக்கான குரலாக தெரிய வேண்டும் என காண்பிக்க முற்பட்டார்.சிகரட் நிறுவனத்தின்; இந்த வரலாற்றுசான்று மதுசார நிறுவனங்களின் தற்போதைய நிலமையையும்,தந்திரோபாயங்களையும் புரிந்து கொள்வதற்கு அமைந்த சாட்சியமாகும். ஆகவே கடந்த மாதங்களில் பெண்களை பயன்படுத்தி அவர்களின் உரிமையைக் கோறுவதாக எண்ணிக்கொண்டு சில வியாபார நுணுக்கங்கள் உள்நுழைக்கப்பட்டன என்பதை புரிந்துக் கொள்ளவேண்டியது மற்றும் ஏனையோருக்கும் தெரியப்படுத்துவது எம்மவரின் கடமை.

ஆகவே இம்முறை மகளிர் தினத்தில் போலியான உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை எதிர்ப்பதற்கு பெண்கள் வலுவடைய வேண்டும் என்பதையும், மதுசாரம் அருந்துவதனால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் பெண்கள் சகித்துக்கொண்டு வாழப் பழகாமல் அதற்கு சரியான நேரத்தில் தகுந்த பிரதிபலிப்புக்களையும் வழங்க ஆரம்பிக்க வேண்டும் அவ்வாறு ஆரம்பிக்குமிடத்து பிரச்சினைகளின் விளைவுகளும், பிரச்சினைகளின் அளவும் குறைவடையும் என்பதில் ஐயமில்லை.513 Viewers