மதுபானம் மற்றும் புகையிலை தொடர்பான நாடளாவிய ஆய்வு

புகையிலை மற்றும் மதுபான பாவனை தொடர்பில் நாடளாவிய ரீதியில் ஆய்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

தொகைமதிப்பு பிள்ளிவிபரத் திணைக்களத்தினூடாக இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் பாலித அபேகோன் குறிப்பிட்டார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த கள ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.84 Viewers