மதுவால் வாழ்க்கையை இழந்தேன் -மனிஷா கொய்ராலா

நடிகை மனிஷா கொய்ராலா மன உளைச்சல் காரணமாக மது அருந்தி, தன் வாழ்க்கையை இழந்ததாகக் கூறியுள்ளார்.

இவர் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ‘பம்பாய்’, கமல்ஹாசனின் ‘இந்தியன்’, அர்ஜுனின் ‘முதல்வன்’, ரஜினியின் ‘பாபா’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

மனிஷா கொய்ராலா 2010ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார்.

 

“நான் விவாகரத்து பெற்றதும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டேன்.

அதனால் மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அதன் பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. மதுப்பழக்கம் காரணமாக எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன்.

“மது அருந்துவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. மது எந்த பிரச்சினையில் இருந்தும் நம்மை வெளியேற்றாது. மேலும் பிரச்சினைகளில் மூழ்கடிக்கவே செய்யும். இதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்,’’ என்று கூறினார்.11 Viewers