மரண தண்டனை விதிக்கிறது தாய்வான் அரசாங்கம்.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு மரண தண்டனை விதிக்கத் திட்டமிடுகிறது தைவான் அரசாங்கம். மது அருந்தி விட்டு மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விபத்துகளை ஏற்படுத்த கூடியவர்களுக்கு அந்தச் சட்டம் பொருந்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தைவானிய அமைச்சரவை, இம்மாதம் (மார்ச்) 28ஆம் தேதி சட்டத் திருத்தம் தொடர்பான வரைவுக்கு ஒப்புதல் அளித்தது. இருப்பினும் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்தால்தான் அது சட்ட வடிவம் பெறும். திட்டத்திற்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தற்போது தைவானில் மதுபோதையில் மரணம் விளைவித்த வாகனமோட்டிகளுக்கு அதிகபட்சமாக 10ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. முதலில் தண்டனை பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் குற்றம் செய்வோருக்கு சிறைத் தண்டனைக் காலத்தை நீட்டிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மது அருந்தி விட்டு வாகனமோட்டி விபத்தின் மூலம் மரணத்தை ஏற்படுத்துவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கவும், கடுமையான காயம் ஏற்படுத்தினால் ஓட்டுநருக்கு 12 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.52 Viewers