2021 ம் ஆண்டு நாட்டிற்கு நன்மையளிக்கும் வரிக் கொள்கையை உருவாக்;குவதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமா?
புகையிலை பாவனையானது இலங்கை வாழ்மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், மற்றும் சமூக வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்கு எதிராக தாக்கம் செலுத்தும் பிரதான காரணியாகும். புகையிலை பாவனையினால் இலங்கையில் தினமும் சுமார் 55 பேர் அகால மரணமடைவதுடன் வருடாந்தம் சுமார் 20000 இலங்கையர்கள் புகைபிடிப்பதால் அகால மரணமடைகின்றனர்.
இலங்கையில் புகையிலைக்கான பொருளாதார செலவு (சுகாதாரத்திற்கான செலவீனம், வினைதிறன் குறைதல் மற்றும் அகால மரணங்கள்) ரூபாய் 214 மில்லியன்கள் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றினால் கணக்கிடப்பட்டுள்ளன. அது தேசிய உற்பத்தியில் 1.6 வீதமானவையாகும். மேலும் புகைப்பவர்கள் சிகரட்டிற்காக நாளாந்தம் ரூபாய் 400 மில்லியன்கள் செலவழிப்பதுடன், இது வருடாந்தம் ரூபாய் 145 பில்லியன்களையும் விஞ்சுகின்றன. இலங்கையில் சிகரட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான ஏகோபித்த உரிமத்தை இலங்கை புகையிலை நிறுவனம் (CTC) பெற்றுள்ளது. அதில் 84.13% வீதமான பங்குகள் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா புகையிலை நிறுவனங்களுக்கு (டீயுவு) சொந்தமானவையாகும். ஆகவே இலங்கை புகையிலை நிறுவனத்தின் இலாபத்தில் பெரும்பகுதி பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு சென்றடைகின்றது.
முறையான கொள்கையை பயனுள்ள விதத்தில் செயற்படுத்தும் போது புகைப்பொருள் பாவனை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறிப்பிடத்தக்களவு குறைவும் என மிகவும் சிறந்த முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பயன்மிகுந்த புகைப்பொருள் கட்டுப்பாட்டின் பிரதான சாதகமாக அமைவது புகைப்பொருளுக்கான வரியை பயன்மிகு முறையில் அறவிடுவதாகும்.
புகைப்பொருளுக்காக வரியை விஞ்ஞான ரீதியாக அறவிடும் போது நாட்டின் வருமானம் உயர்த்தப்படுவதுடன் புகைப்பொருள் பாவனையையும் குறைக்க முடியும். இது அரசாங்கத்திற்கும் பொது மக்களுக்கும் வெற்றிகரமான சந்தர்ப்பமாகும். இது நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவும் சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்குமான சிறந்த மூலதனமாகும்.
இலங்கையில் இன்னும் பயனுள்ள முறையில் புகைப்பொருளுக்கான வரி அறவீட்டுக்கொள்கை முறையான முறையில் செயற்படுத்தப்படவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அரசாங்க திறைசேறிக்கு வருடாந்தம் அறவிடக்கூடிய ரூபாய் பில்லியன்கள் அளவு கடந்த இரு தசாப்த காலத்தினுள் சேகரித்துக்கொள்ள முடியால் போயுள்ளது. புகையிலை உற்பத்தி நிறுவனத்தின் இலாபம் அதிகரித்திருந்தாலும் அதற்கேற்றவகையில் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்காமைக்கான காரணம் இதுவாகும். இந்த ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதாவது, இலங்கையில் சிகரட் கொள்திறன் பல வருடங்களாக அதிகரித்துள்ளது இதன் மூலம் கருதப்படுவதாவது, ஏனைய உற்பத்திப் பொருட்களுடன் ஒப்பிடும் போதும் சிகரட் விலை, இலாபம் மற்றும் பணவீக்கத்துடன் ஒப்பிடும் போதும் சிகரட் சார்பளவில் விலை குறைந்த ஒரு பொருளாக மாறியுள்ளது. பொருளியளார்கள் சுட்டிக்காட்டுவது என்னவெனில், இன்று காணப்படும் பணவீக்கத்திற்கேற்ப சிகரட் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாகும். அரசாங்கத்தின் மூலம் புகைப்பொருட்களுக்கான வரியை அறவிடும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சிகரட் உற்பத்தி நிறுவனத்தின் ஒரு தொகை விலையை சேர்த்தே சந்தையில் விலை தீர்மானிக்கப்படகின்றது. இவ்வாறு அந்த நிறுவனத்திற்கு தலையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமைக்குக் காரணம் அரசாங்கத்தினால் முறையான முறையில் வரி அறவிடப்படாமையேயாகும். இதன் இறுதி விளைவாக அமைவது, வரி அதிகரிக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சந்தையின் விலையை தீர்மானிக்கும் நிறுவனம் அதிக இலாபம் பெறுவதாகும். அரசாங்கத்தின் மூலம் பணவீக்கம் மற்றும் கொள்திறனுக்கு ஏற்ற வகையில் முறையான முறையில் வரி அறவிடப்படுமாயின் மற்றும் சந்தையில் விலை தீர்மானிக்கப்படுமாக இருந்தால் இவ்வாறு வெளிநாட்டு நிறுவனத்திற்கு நாட்டின் பணத்தை திசைதிருப்ப முடியாது போகும். இந்த நிலைமையை மிகவும் இலகுவாகவும், துரிதமாகவும் சரி செய்து கொள்ள முடியும். புகையிலை வரிக் கொள்கை அதிகமான நாடுகளில் பல தசாப்தங்களாக அவதானிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் உலக வங்கி மூலம் புகையிலை வரிக்கொள்கை தொடர்பாக பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இப் பரிந்துரைகள் எதுவும் இலங்கையில் பின்பற்றப்படாமையானது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
Institute of Policy Studies – IPS மூலம் இவ்வருடத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்விலிருந்து தெரிய வந்திருப்பதானது, பயன்மிகு வரிக்கொள்கையை செயற்படுத்துவதன் மூலம் நாட்டிற்கு பின்வரும் குறிப்பிடத்தக்க பிரதிபலன்களை அடைந்து கொள்ள முடியும் என்பதாகும்.
- 2018ஆம் ஆண்டு ரூபாய் 95 பில்லியன்களாக இருந்த சிகரட்டின் வரிவருமானம் 2023ஆம் ஆண்டில் ரூபாய் 132 பில்லியன்களாக உயர்வடையும்.
- 2023ஆம் ஆண்டு சிகரட் கொள்வனவு 03 பில்லியன்களில் இருந்து 02 பில்லியன்களாக குறைவடையும்
- 2023ஆம் ஆண்டில் புகைத்தல் வீதம் (15 வயதிற்கு மேல்) 12.5வீதமாக குறைவடயும்
- இதனால் எதிர்காலத்தில் 141,000 அகால மரணங்கள் குறைவடையும்.
புகைப்பொருள் வரிக்கொள்கை தொடர்பில் அதிகாரிகள் சிலருக்கு மாத்திரம் தீர்மானம் எடுக்க இடமளித்தமை இதுவரை காணப்பட்ட பிரதானமான பலவீணமாகும். அது அரசாங்கத்திற்குக் கிடைக்கும் ரூபாய் பில்லியன்கள் அளவு வருமானம் மற்றும் பல்லாயிரக்கணக்காண உயிர்களின் இரணம் பிழையான முறையில் தீர்மானிக்கப்படுகிறது.
இலங்கையில் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகளாக பின்வருபவை குறிப்பிடப்பட்டுள்ளன.
- சரியான புள்ளிவிபரங்களை மையமாக வைத்து சிகரட் விலை மற்றும் வரி ஆகிய இரண்டையும் பாராளுமன்றத்தின் மூலம் தீர்மானித்தல்
- இலங்கையில் பணவீக்கம் மற்றும் கொள்வனவு திறன் ஆகியவற்றிற்கு ஏற்ப புகையிலை வரியை சரியான முறையில், படிப்படியாக அதிகரித்தல்
- ஒவ்வொரு சிகரட் வகைக்கும் வௌ;வேறு வரி அளவை தீர்மானிக்காமல் அனைத்து சிகரட் வகைகளுக்கும் ஒரு பொதுவான முறையில் வரி முறையை அறிமுகப்படுத்தல். (தற்போது சிகரட்டிற்காக அறவிடப்படும் அதிகூடிய வரி அளவையே அனைத்து வகைககளுக்கும் தீர்மானிக்க வேண்டும்)
வரி அதிகரிப்பதற்கு எதிர்ப்பார்க்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் புகையிலை உற்பத்தி நிறுவனம் வரி அதிகரிப்பிற்கு எதிராக பொய்யான தர்க்கங்களை முன்வைக்கின்றது. இந்த பொய்களில் ‘பீடி பாவனை அதிகரித்துள்ளது’, ‘சட்டவிரோத சிகரட் வியாபாரம் அதிகரித்துள்ளது’, ‘சிகரட் விற்பனை அதிகளவு வீழ்ச்சியடைந்துள்ளது’, ‘அரசாங்கத்தின் இலாபம் குறைவடையும்’ என்பனவாகும். இவை அனைத்தும் போலியானதென இலங்கையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டவற்றை கருத்திற்கொண்டு புகையிலை உற்பத்தி நிறுவனம் மற்றும் அதன் முகவர்களின் அழுத்தங்களிற்கு ஆளாகாமல் புகையிலை கட்டுப்பாட்டின் அந்த முக்கியமான பிரச்சினையை தீர்ப்பதற்கு, ஆளுங்கட்சி எதிர்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்கள் பிரதி நிதிகளும் இம்முறை வரவு செலவு திட்டத்தின் போது உன்னிப்பாக செயற்படுவார்களா என மக்கள் அவதானத்துடன் இருக்கின்றனர்.
138 Viewers